AD

அறுவை சிகிச்சையை பதிவிட்ட பிரபல நடிகை ..!!!

இயக்குனர் எழில், நடிகர்  ஜிவி.பிரகாஷை வைத்து இயக்கியுள்ள படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடித்துள்ளார் நிகிஷா படேல். இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். "தலைவா"படத்தில் மூலம் தமிழில் அறிமுகமான இவர்,'கரையோரம்', 'நாரதன்' "என்னமோ ஏதோ",  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஜிவி.பிரகாஷ் யுடன் இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு  இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படம் காதல், காமெடி, கலந்த படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் படபிடிப்பை முடித்தவுடன் இவர் அறுவை சிகிச்சை ஒன்றிற்காக நிகிஷா படேல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில் சில நாட்களுக்கு முன்  அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டேன். இருப்பினும் எழில் அவர்களின் படத்தில் படப்பிடிப்பை நான் முடித்துவிட்டேன். இந்த படத்தில் ஜிவி.பிரகாஷ் மற்றும் சதீஷுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவங்கள் எனக்கு. மருத்துவமனையில் இருந்து குணமாகி வீடு திரும்பியதும் எனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்த உள்ளேன் என கூறியுள்ளார்.

#actorsathish #gvprakash #nikishapatel #tamilcinemaking #kollywoodcinema #kanndaactress #teluguactress