AD

ஸ்ருதியுடனான காதலை முறித்துக் கொண்ட மைக்கல்


ஸ்ருதி ஹாஸன் லண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கார்சேலை காதலித்து வந்தார். அடிக்கடி மைக்கேல் இந்தியா வருவதும், ஸ்ருதி லண்டனுக்கு செல்வதுமாக இருந்து காதலை வளர்த்தனர்.

புத்தாண்டை அமெரிக்காவில் இருவரும் ஒன்றாக கொண்டாடினார்கள். இந்நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டனர். ஸ்ருதி ஹாஸனை பிரிந்தது குறித்து  இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன்  போஸ்ட் போட்டுள்ளார் மைக்கேல்.


அத்துடன் இருவரும் வெவ்வேறு இடங்களில் இருப்பதால் இனி தனியாக தான் செல்ல வேண்டும் போன்று. ஆனால் இந்த இளம் பெண் என் சிறந்த தோழியாக இருப்பார் என்று மைக்கேல் ட்வீட் செய்துள்ளார்.
மைக்கேல் கார்சேலின்  இந்த பதிவினை பார்த்த ஸ்ருதி ஹாஸனின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன்  காதலை முறிக்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்களின்  திருமணம் இந்த ஆண்டு நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இப்படி ஆகிவிட்டது. ஸ்ருதி, மைக்கேல் காதலுக்கு கமல் ஹாஸனும், சரிகாவும் சம்மதம் கூறியும் பலனில்லாமல் போய்விட்டது.

 #shruthihaasan #michael #tamilcinemaking