AD

பாலாவுடன் இணையும் சூர்யா? நந்தா, பிதாமகன் கூட்டணி வெல்லுமா?


சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள NGK மே 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. அந்த படத்தை தொடர்ந்து சூர்யா, ஆர்யா, சயீஷா நடித்துள்ள காப்பான் திரைப்படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கங்கோரா இயக்கத்தில் சூர்யா அவரது 38-வது படத்தை உறுதி செய்துள்ளார்.

மேலும் தற்போது இந்த படத்தை தொடர்ந்து நந்தா, பிதாமகன் என இரு மிக பெரிய வெற்றி படத்தை சூர்யாவுடன் இணைந்து கொடுத்த பாலாவுடன் மீண்டும் சூரிய இணைய உள்ளார். ஆம், இவர்கள் கூட்டணியில் வெளியான இந்த இரண்டு படங்களுமே சூர்யாவிற்கு அதிக ரசிகர்களை குவித்தது.

சினிமா வாழ்வில் முக்கியத்துவம் பெற்று கொடுத்த இயக்குனர் பாலாவுடன் சூர்யா மீண்டும் இணைய இருக்கிறார். எப்படியும் இந்த படமும் இவருக்கு மிகுந்த வெற்றி படமாக தான் அமையும்.