AD

மீண்டும் வருகிறார் உபாசனா

தமிழில் 88 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வங்கத்து பொண்ணு உபாசனா. அதன்பின்னர் டிராபிக் ராமசாமி படத்திலும் நடித்தார்.

ஆனாலும் இந்த இரு படங்களுமே கைவிட்ட நிலையில் சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது, "என்னை சுடும் பனி" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இன்னொரு நாயகியாக சுமா பூஜாரி நடிக்கிறார். 

இதில், டீக்கடை பென்ஞ் படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த வெற்றி ஹீரோவாக, வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார், அருள்தேவ் இசை அமைக்க, ராம்ஷேவா இயக்குகிறார். 


#ubashana, #tamilcinemaking, #ennai_sudum_pani