AD

ராஜமௌலியுடன் கைகோர்க்கும் நித்தியா

இயக்குநர் ராஜமௌலியின் இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் நித்யா மேனன்  கதாநாயகியாக வருவார் என்கிற எதிர்பார்ப்புத் தோன்றியுள்ளது.

ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகிகளாக அலியா பட்டும் இங்கிலாந்து நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.

படத்தில் இருந்து டெய்சி எட்கர் சில காரணங்களால் வெளியேறினார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக இந்த படத்தில் நித்யா மேனன் நடிப்பார் என தெரிகிறது. 

நடிகர் ராம்சரண் படப்பிடிப்பில் காயம் அடைந்ததால் ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இந்த படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது நித்யாமேனனும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


#nithya_menon,  #Rajamouli, #RRR, #Alia_Bhatt, #Ram_Charan