AD

ஓவியாவின் களவாணி 2 பற்றிய புதிய அப்டேட்


தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்புடைய நடிகையை ஓவியாவும் ஒருவர். இவரது பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்த பிறகு தான் இவருக்கு மிகுந்த ரசிகர் கூட்டம் உருவானது. மேலும், நடிகை ஓவியாவின் நடிப்பில் 90ml திரைப்படம் வெளியாகி பல சர்ச்சைகளை சந்தித்தது. அந்த படத்தை தொடர்ந்து கணேஷா மீண்டும் சந்திப்போம் படத்திலும் இவருக்கு பெரிதாக மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை.


மேலும் தற்போது ஓவியா அவரது ட்விட்டர் பக்கத்தில் களவாணி 2 படத்தை பற்றிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில் நாளை களவாணி 2 படத்தின் டீஸர் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவித்திருக்கிறார். படத்தில் இவர் கல்லூரி செல்லும் மனைவியாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் போஸ்டரில் மிகவும் அழகாக உள்ளார் நடிகை ஓவியா. களவாணி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த படம் அமையும் என்றும் கூறப்பட்டு வருகிறது.


#oviya #kalavani2 #vimal #kalavaninewupdate #kalavanireleasedate #kalavaniteaserreleasedate