AD

காப்பான் டீஸர் பற்றிய முக்கிய அறிவிப்பு!


நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக வெளியானது தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம். இந்த படம் வெற்றியா தோல்வியா என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மட்டும் படம் மிகுந்த வசூல் பெற்றதாக கூறி வந்தார். ஆனால் மக்கள் மத்தியில் படத்திற்கு நெகடிவ் விமர்சனங்களே கிடைத்தது.


மேலும், இந்த படத்தை தொடர்ந்து சூர்யா மிகுந்த இடைவேளைக்கு பிறகு நடித்து முடித்துள்ள படங்கள் காப்பான் மற்றும் NGK, இந்த படங்களின் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது. NGK படம் மே 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதேபோல் காப்பான் திரைப்படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து, மோகன்லால், ஆர்யா, சயீஷா என பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். அதற்காகவே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.


மேலும் தற்போது படத்தின் டீஸர் வெளியாகும் விஷயத்தை படத்தின் இயக்குனருடன் இணைந்து இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்கள். ஆம், படத்தின் டீஸர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாம்.

#kaapaan #suriya38 #kaappaanteaser #kaappanreleasedate #kaappaancastandcrew