AD

மே முதல் நாள் வரும் தேவராட்டம்

இயக்குநர் முத்தையா இயக்கத்தில், கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் இணைந்து நடித்துள்ள 'தேவராட்டம்'.

மே முதல் நாளில் திரைக்கு வரும்  இந்த படத்தின் டிரைலர் திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 

இதனைப் பார்க்க ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பதற்காக, படக் குழுவினர், திருநெல்வேலியில் உள்ள ஒரு திரையரங்கத்திற்கு சென்றனர்.

அப்போது,கௌதம் கார்த்திக்  தெரிவித்ததாவது,

'தேவராட்டம்' படம் முழுக்க முழுக்க கிராமிய பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் படம். கிராமத்துக் கதையை அப்படியே மண் மணம் மாறாமல் படமாக்கப்பட்டிருக்கிறது. 

படத்தின் எந்த இடத்திலும் ஆபாசமோ; விரசமோ இல்லாமல் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கக் கூடிய படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. 

வெகு நாள்களுக்குப் பின், ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தி, படம் பார்க்கும் அனைவருக்கும் ஏற்படும் என்பது உறுதி. அதனால், படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. 


#gautham_karthik #devarattam #tamilcinimaking