AD

ரஜினி அவரது ஓட்டை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் போட்டுவிட்டார்!


ஒரு இந்தியனாக அனைவர்க்கும் வாக்கு செலுத்தவேண்டிய கடமை இருக்கிறது.  இது நாடாளுமன்ற இரண்டாம் பாகம் ஆகும். இன்று தமிழகத்தை சேர்ந்த அனைவரும் அவர்களது ஓட்டுகளை வாக்கு சாவடியில் பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில், பல நடிகர்களும் அவர்களது வாக்கை பதிவு செய்து வருகிறார்கள்.


அதிலும் ரஜினி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்கு சாவடி சென்று அவரது ஓட்டை செலுத்தியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் அங்கு கூடி ரஜினியை வரவேர்த்திருக்கிறார்கள். மேலும், பத்திரிகையாளர்களும் அனைத்து பிரபலங்களையும் புகைப்படம் எடுத்து வருகிறார்கள். ஆனால் லதா ரஜினிகாந்த் ஓட்டு போட வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.