AD

தர்பாரை பாட்ஷா படத்தோடு ஒப்பிடும் நெட்டிசன்கள்..!!!

ரஜினி நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ள ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு நாளை மும்பையில் தொடங்குகிறது. வழக்கமாக முருகதாஸ் அவரது  படங்களின் கதைகள் தொடர்பாக சர்ச்சையில் சிக்கி சின்னா பின்னமாவார். ஆனால் இம்முறை கொஞ்சம் வித்தியாசமாக  சர்ச்சைகளில் சிக்கவிரும்பாத முருகதாஸ் இம்முறை ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான ‘பாட்சா’வையே உல்டா செய்து திரைக்கதை அமைத்திருக்கிறாராம்.
இது தொடர்பான கமெண்ட்கள் சமூக வலைதளைங்களில் தாறு மாறாக வலம் வர ஆரம்பித்துள்ள நிலையில் அதே சிகை அலங்காரம், அதே சிரிப்பு,அதே தாடி, அதே மும்பை , அதே கண்ணாடி, அதே நாய், அதே துப்பாக்கி கொஞ்சம் மாறுங்க ரஜினி,  உங்கள் நண்பர் அமிதாப்பிடமிருந்தாவது வயதுக்கேற்ப எப்படி நடிக்கிறதுன்னு கத்துக்குங்க...என்று மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ‘95ல் வெளிவந்த ‘பாட்சா’ படத்தை  பார்த்து அப்படியே உல்டா செய்யப்பட்டுள்ள படம் தான் ‘தர்பார். இதன்மூலம் நெட்டிசன்களுக்குத் தெரிவிக்கப்படும் செய்தி  ‘தர்பார்’ எந்த ஆங்கிலப்படத்தின் காப்பி  என்று கூகுளில் தேடி நேரத்தை வீணடிக்கவேண்டாம்.

#Rajinikanth #Nayanthara #Thalaivar167 #Tamilcinemaking #Basha

இதையும் படியுங்க:
https://www.tamilcinemaking.com/2019/04/first-look-of-superstar-rajinikanth-167.html
நடிகை நயன்தாராவை முந்தும் கீர்த்தி சுரேஷ்..!!!