AD

அமிதாப்பச்சனுடன் கைகோர்க்கும் பிரியாமணி

திருமணத்திற்குப் பின்னரும் தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடிக்கத் தொடங்கி விட்டார் பிரியாமணி. 

தமிழில் குற்றப்பயிற்சி, தெலுங்கில் ஆர்ஆர்ஆர் மற்றும் கன்னடத்தில் டாக்டர் 56, நன்னா பரகரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், வொயிட் என்ற குறும் படத்திலும் நடித்துள்ளார் பிரியாமணி. கண் பார்வை குறைபாடுள்ள பெண்ணாக இதில் நடித்துள்ளார். 

கண்தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ஒரு நாய்குட்டியும் முக்கிய பாத்திரத்தில்  நடித்துள்ளது. இந்தக் குறும் படத்திற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.


#Priyamani, #Amitabh_Bachchan, #tamilcinemaking