AD

"பீர்" பிரச்சனையை ஏற்படுத்திய பிரபலத்தின் திருமணம்


பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸின் திருமணம் கடந்த டிசம்பர் மாதம் ஜோத்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடைபெற்றது. 

அவர்களின் திருமணத்தில் ஏற்பட்ட பெரிய பிரச்சனை குறித்து நிக் ஜோனஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

‘எனது நண்பர்கள் நிறைய பீர் குடிப்பார்கள். இந்நிலையில் திருமணத்தின்போது பீர் தீர்ந்துவிட்டது. அது தான் பெரிய பிரச்சனை. பீர் தீர்ந்துவிட்டதால் என் நண்பர்கள் மது அருந்தினார்கள்’ என்று கூறியுள்ளார்.  

இவ் விடயம் பற்றி நிக்கின் சகோதரர் ஜோ ஜோனஸ் இவ்வாறு கூறியுள்ளார். “என் திருமணத்தின் போது பீர் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நிறைய பீர் வாங்கி வைக்க வேண்டும்”.ஜோ ஜோனஸ் தனது காதலியான கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகை சோஃபி டர்னரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். 

#nickjonas #priyankachopra #tamilcinemaking