AD

2 கோடி கொடுத்தும் அதில் நடிக்க மறுத்த சாய்பல்லவி

பிரேமம் படம் மூலம் திரையுலகில் பிரபலமான சாய் பல்லவி தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். இந் நிலையில் அண்மையில் சிவப்பழகு கிரீம் விளம்பர வாய்ப்பு ஒன்று அவரை தேடி வந்தது. ஆனால் சாய்பல்லவி அவ் விளம்பரத்தில் நடிக்கவே முடியவே முடியாது என்று கூறிவிட்டாராம்.

ஆனால் விளம்பர நிறுவனம் நடிக்க ஒப்புக் கொண்டால் ரூ. 2 கோடி சம்பளம் தருகிறோம் என்றும் கூறினார்களாம். எத்தனை கோடி கொடுத்தாலும் சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று கறாராக தெரிவித்து விட்டாராம் சாய் பல்லவி.

இயற்கை அழகே அழகு என்று நம்புபவர் அவர் மற்றும் சாய் பல்லவி தான் நடிக்கும் படங்களில் மேக்கப் போடுவது இல்லை. அவரது முகத்தில் உள்ள பருக்களை மறைக்கவும் அவர் முயற்சி செய்யாமல் இயற்கையாகவே நடித்து வந்தார்.

இவரது இந்த முடிவு அதிகார பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை இருப்பினும் அவரின் முடிவு குறித்து  ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.

#Saiballavi #saiballaviad #Tamilcinemaking