AD

நயனிற்காக விக்கி செய்த வேலை என்ன தெரியுமா?


தர்பார் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கிய விஷயம் நாம் அனைவர்க்கும் தெரியும். படத்தை முழுவதும் மும்பையில் தான் எடுக்க இருக்கிறார்கள். படத்திற்காக தலைவர் 120 நாட்கள் கால் சீட் கொடுத்துள்ளார். மேலும், நயன்தாரா 30 நாட்கள் கால் சீட் கொடுத்துள்ளார். படத்தின் வேலைகள் தொடங்கியதால் நயன்தாரா மும்பை கிளம்பிவிட்டார்.

தர்பார் குழுவிற்காக 7 ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு கொடுத்துள்ளார்கள் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ். இந்த நிலையில், அதே நிறுவனத்திற்கு விக்னேஷ் சிவன் புதிய கதை எழுதுவதால், அந்த கதைக்கான பேச்சுவார்த்தை சென்னை நடைபெற்று வந்துள்ளது. ஆனால் நயன்தாரா மும்பை கிளம்புவதால், அவரை பிரிந்து இருக்கமுடியாதென்று விக்னேஷ் சிவனும் மும்பையில் தனக்கும் ரூம் போட்டு தரும்படி லைக்காவிடம் கேட்டுள்ளார்.

பின்பு அவர்களும் வேறு வழியில்லாமல் விக்னேஷ் ஷிவானிற்கு ரூம் போட்டு கொடுத்திருப்பார்கள் போல் தெரிகிறது. ஏன்னெனில் விக்னேஷ் சிவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சரமாரியாக இவரை கலாய்த்து வருகிறார்கள்.


#vignesh shivan #nayanthara #darbar #rajinikanth #superstarrajinikanth