AD

சூர்யா 38 படத்தின் தற்போதைய முழு விவரம்


நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக வெளியானது தானா சேர்ந்த கூட்டம் படம் தான். இந்த படத்தை தொடர்ந்து அவர் NGK மற்றும் காப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. NGK மே 31 ஆம் தேதி வெளியாகிறது.

மேலும் காப்பான் ஆகஸ்ட் 30 வெளியாக இருக்கிறது. இந்த படங்களின் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. மேலும், இந்த படத்தை தொடர்ந்து தற்போது சூர்யா சுதா கங்கோரா தயாரிக்கும் அடுத்த படத்திலும் நடிக்க இருக்கிறார். மேலும் படத்திற்கான பூஜையும் இன்று தான் நடந்து முடிந்துள்ளது.

படப்பிடிப்பு நாளை தொடங்கும் என்று கூறியுள்ளார்கள். படத்தின் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ், தைக்கூடம் பிரிட்ஜ் பாண்ட்டுடன் இணைந்து படத்திற்கான பாடல்களுக்கு இசையமைக்க தொடங்கிவிட்டார். மேலும், பூஜையில், சூர்யா, கார்த்தி, ஜி .வி. பிரகாஷ், சூர்யாவின் தந்தை என அனைவரும் சுதா கங்கோராவோடு கலந்துகொண்டுள்ளார்கள்.