AD

துப்பறிவாளன் 2 ஆர்வத்தில் விஷால்

துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் நடிக்க மிக ஆர்வத்துடன் இருக்கிறாராம் விஷால்.

விஷால் நடித்த சண்டக்கோழி 2ம் பாகம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் இரண்டாம் பாகத்தில் ஆர்வமின்றி இருந்தார். இதற்கிடையில் அவர் நடித்து வெற்றி வெற்ற இரும்புத்திரை 2ம் பாகத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. 

அதன் இயக்குனர் மித்ரன் தற்போது வேறு படத்தை இயக்கிக் கொண்டிருப்பதால் இரும்புத்திரை 2 ஆம் பாகத்துக்கான ஐடியா இப்போதைக்கு இல்லை தெரிவித்து விட்டார்.

தற்போது துப்பறிவாளன் இரண்டாம் பாகம் ஸ்கிரிப்டை மிஷ்கின் முடித்து விட்டார் என்றும், அதற்கு விஷால் சம்மதம் தெரிவித்து விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

தற்போது  சுந்தர்.சி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் விஷால், அந்தப்படம் முடிந்த பின்னர் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிஷ்கின், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் சைக்கோ படத்தையும் இயக்கி வருகிறார்.