AD

ஜெயலலிதாவாக நடிப்பதற்கு 24 கோடி சம்பளம் வாங்கும் நடிகை


தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் மாபெரும் தமிழ் புலமை பெற்ற தலைவர் மு. கருநதியின் என இவர்கள் இருவரின் இறப்பிற்கு பின் வரும் முதல் தேர்தல் இது தான். மக்கள் மத்தியில் அதிக ஆரவாரமாக யார் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற பேச்சு போய் கொண்டு தான் இருக்கிறது. இந்த நேரத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மூன்று இயக்குனர்கள் படமாக்கிக்கொண்டு வருகிறார்கள்.

ஆம், அயர்ன் லேடி என்ற பெயரில் பிரியதர்ஷினி என்ற பெண் இயக்குனர் நித்யா மேனனை கதாநாயகியாக வைத்து ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்கி வருகிறார். அதே சமயத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் வெப் சீரியஸ் என்று ரம்யா கிருஷ்ணனை வைத்து ஜெயலலிதைவின் வாழ்க்கையை படமாக்குகிறார்.


மேலும் எ. எல். விஜய் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் கங்கனா, ஜெயலலிதாவாக நடிக்க தமிழில் "தலைவி" என்ற தலைப்பிலும், ஹிந்தியில் "ஜெயா" என்ற தலைப்பிலும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு முன்பே வந்த நிலையில், தற்போது இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை கங்கனா நான்கு மாதங்கள் கால்ஷீட் கொடுத்து இருப்பதாகவும், 24 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் பாலிவுட் வட்டாரங்களில் பேசி வருகிறார்கள்.