AD

நயன்தாராவிற்கு கிடைக்காதது நிவேதா பெத்துராஜ்க்கு கிடைத்துள்ளது!!

"ஒரு நாள் கூத்து" படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்தான்  மதுரை பொண்ணு நிவேதா பெத்து ராஜ். துபாயில் பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும், தமிழிலும் சரளமாக பேச தெரிந்ததால்  அடுக்கடுக்காக தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.

 கிளாமருக்கு சரியென சொல்லி   'டிக் டிக் டிக்' படத்தின் மூலம் பிகினி உடையில் வந்து ரசிகர்கள் ஹார்ட் பீட்டை எகிற செய்தார். தற்போது இவர் நடித்த  பொன்மாணிக்கவேல் , ஜகஜால கில்லாடி , பார்ட்டி என மூன்று படங்கள் ரிலீசுக்கு வரிசையாக  உள்ளது.

எனினும் இவருடைய டார்கெட், பாலிவுட் கிடையாது, அதையும் மிஞ்சி ஹாலிவுட் படங்களில் நடிப்பது தான். இதற்கான முயற்சிலும் முழுமையாக ஈடுபட்டார். தற்போது அதற்கான பலன் கிடைத்ததோடு இல்லாமல் இவருடைய கனவும்  நிறைவேறி உள்ளது.
அதாவது, இவர் ஹாலிவுட் படம் ஒன்றில் கமிட் ஆகி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா பறக்க உள்ளார் நிவேதா. மேலும் வரும் ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க  உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

கோலிவுட் திரையுலகில் 10 வருடங்களாக கொடிகட்டி பறக்கும் நடிகைகள் இருந்தால் கூட, ஹாலிவுட் படங்களில் இன்னும் கால் பாதிக்காத நிலையிலேயே உள்ளார்கள். நான்கே வருடத்தில் நடிக்க வந்த நிவேதா பெத்துராஜின் வளர்ச்சி பலரை வாயடைக்க வைத்துள்ளது.

#nivetha pethuraj #tamil cinema #kollywood #hollywood #nayanthara #tamilcinemaking