AD

24 மணி நேரத்திற்குள் 1 மில்லியன் பார்வையாளர்கள் - Mr.லோக்கல்!!

நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன்
"வேலைக்காரன்"படத்திற்கு பின் மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம்தான் 'மிஸ்டர் லோக்கல்'. இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார் இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

வரும் மே 1 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின், 'டக்குனு டக்குனு' என தொடங்கும் வீடியோ  பாடலின் வரி ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையில் அனிருத் இந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடல்  வெளியான 24 மணி நேரத்திற்குள் 1 மில்லியன் ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. இதனால் நடிகை நயன்தாரா மற்றும் படக்குழுவினரை செம்ம மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

#nayanthara #velaikaran #tamil cinema #lyrical video #sivakarthikeyan #tamilcinemaking