AD

தேர்தலுக்கு தயாராகும் விஷால்

சினிமாவில் நடித்து கிடைக்கும் புகழை வைத்து, அடுத்தபடியாக அரசியலிலும் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறார்கள் திரையுலகத்தினர். 

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்டவர்கள் அரசியலுக்கு வந்தனர். 

இப்போது ரஜினி, கமலும் அரசியலில் களம் கண்டுள்ளனர். விரைவில் விஷால், விஜய்யும் களம் காண இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆர்.கே.நகர் சட்டசபை தேர்தலிலேயே போட்டியிட முயற்சித்தார் விஷால். எனினும் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து   பிரதமரையெல்லாம் சந்திக்கப்போவதாக விஷால் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், திருமண வேலைகளில் தீவிரமடைந்துள்ள விஷால், நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கூறியிருப்பதாவது, 

நாடாளுமன்றத் தேர்தல் திகதி அறிவிக்கவில்லை, இடைத்தேர்தல் தொடர்பாகவும் பேசிக் கொண்டு இருக்கிறோம். இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்.

 நாடாளுமன்றத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று தேர்தல் திகதி அறிவித்த பிறகு முடிவெடுப்பேன். நிச்சயம் இந்த இரு தேர்தல்களும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் முக்கியமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.