நயனுக்கு காதல் கவிதை எழுதிய இயக்குனர்!!
அதேபோல் நயன்தாராவின் பிறந்த நாளின் போதும் அவரது படம் ரிலீஸ் ஆகும்போது வாழ்த்து சொல்ல தவறாத விக்னேஷ் சிவன், நேற்றைய மகளிர் தினத்திலும் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார். ரோஜாப்பூக்களால் நயன்தாராவை அலங்கரித்த விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் "நயன்தாரா" தான் தன்னுடைய உலக அழகி என்றும் வர்ணித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பது:

நீ என் உலக அழகியே… உன்னை போல் ஒருத்தி இல்லையே… மகளிர் தின வாழ்த்துக்கள். தங்கள் மீது யார் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்களே வலுவான பெண்களாக உருவாகிறார்கள். இந்த சூழலை பெண்கள் தான் அழகாக மாற்றுகின்றார்கள். ஆதலால் உங்களுக்கு நன்றி. இந்த மகளிர் தினத்தில் பெண்களுக்கு மரியாதை அளிப்பதன் மூலம், அவர்களை நேசிப்பதன் மூலம் இதயத்தை முழுமையாக்கலாம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
#nanthara #ladysuperstar #vignesh #lovestory
Post a Comment