AD

கணவரைத் தேடும் த்ரிஷா

நடிகை த்ரிஷா தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.

பின்னர், தயாரிப்பாளர் வருண்மணியனுடன் த்ரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால், திருமணம் நின்றுபோனது. 

இந்த நிலையில், சினிமாவில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் அவர் சமீபத்தில் தனது திருமணம் குறித்து ஒரு பேட்டியளித்துள்ளார்.

அதாவது, திருமணத்தில் நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். இப்போது யாரையும் காதலிக்கவில்லை. 

சரியான மனிதரை சந்தித்தால் நாளையே கூட திருமணம் செய்வேன்

திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு கண்டிப்பாக அந்த தகவலை அனைவருக்கும் சொல்வேன் என்றும்  தெரிவித்துள்ளார்.





#Varun_Manian,#Trisha, #Rana_Daggubati