AD

தனுஷின் அசுரன் படத்தின் புதிய தகவல்!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக தெரிய வந்துள்ளது. அதுவும் அப்பா, மகன் என இரு வித்தியாசமான கதாபாத்திரத்தில்.

இதில் அப்பா கேரக்டரில் நடிக்கும் நடிகர்  தனுஷின் வயது 45 என்றும்,  இந்த படத்தில் தனுஷ், இரண்டு அசுரன்களாக தெரிவார் என்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். ஒரு மலையேறும் காட்சியில் மலையேறி திரும்பி இறங்க 6 மணி நேரம் ஆகியும் எந்தவிதமான  சலிப்பும் ஏற்படாமல் நடிகர்  தனுஷ் நடித்ததாகவும், அவருடன் பணிபுரியும் ஒவ்வொரு படத்திலும் அவர் தன்னை நடிப்பால் ஆச்சரியப்படுத்தி வருவதாகவும் வெற்றிமாறன் கூறியள்ளார்.
இந்த படத்தில் நடிகை மஞ்சுவாரியர், நடிகர்கள் பசுபதி, பாலாஜி சக்திவேல் ஆகியோர், தான் எதிர்பார்த்ததைவிட நல்ல ஒத்துழைப்பையும் அபார நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி வருவதால் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்ற வெற்றிமாறன் கூறியுள்ளார். ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' திரைப்படம் 'லாக்கப்' என்ற நாவலின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. அதேமாதிரி இந்த படமும் "வெக்கை" என்ற நாவலை தழுவி கதை ஆகும்.
இந்த படத்திற்க்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய,  விவேக்ஹர்சன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.
#dhanush #asuran #manju warrier #tamilcinemaking