AD

அதிதிராவின் ஆசையைப் பாருங்கள்

ஹிந்தியில் முன்னணி நடிகையாக வேண்டும் என்பது அதிதி ராவின் லட்சியம். ஆனால், அதற்கேற்ற படங்கள் கிடைக்காததால், பெரும் தவிப்புக்கு ஆளாகி வருகிறார். 

தெலுங்கு, தமிழ் படங்களில் கவனம் செலுத்தியும் அங்கும், எதிர்பார்த்த வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. தற்போது, சைக்கோ என்ற   ஒரு தமிழ் படம்  இவரது கைவசம் உள்ளது. மிஸ்கின் இயக்கும் இந்த படத்தில், உதயநிதி ஹீரோவாக நடிக்கிறார்.

இது தொடர்பில் அதிதி தெரிவித்ததாவது, ''பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதற்காக, கவலைப்பட மாட்டேன். இப்போது, தேசிய அளவில், அதிகமான விளம்பரப் படங்களில் நடித்து வரும் நடிகையரில், நானும் ஒருத்தி. 

திரைப்படமோ, விளம்பரமோ, ஏதாவது ஒரு வகையில், மக்களிடம் பேசப்படும் அளவுக்கு இருக்க வேண்டும் என்பதே, என் ஆசை,'' என்கிறார்.


#aditirao, #udhayanidhi, #Saiko, #tamilcinemaking