AD

மீண்டும் ஜோடியாகும் சரத்குமார்-ராதிகா

வானம் கொட்டட்டும் படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். 

இயக்குனர் மணிரத்தினத்தின் உதவியாளர் தனசேகரன் இயக்கும்  இந்தப் படத்தில் சரத்குமார்-ராதிகா கணவன், மனைவியாக நடிக்கிறார்கள். 

மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு தற்போது நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனை மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

படப்பிடிப்புகள் எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது. சென்னை, மதுரை இடங்களில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.



#Aishwarya_Rajesh, #Sarathkumar, #Raadhika, #Mani_Ratnam