AD

புகழ் தேடும் தமன்னா

தமிழ், தெலுங்கு படங்களில் அதிகம் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இருப்பினும் ஹிந்தி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்தில் ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ், போன்ற சில படங்களில் நடித்தும் அது அவருக்கு கைகொடுக்கவில்லை.

கொலையுதிர்காலம் படத்தின் ஹிந்தி பதிப்பான காமோஷியில் நடித்துள்ளார் தமன்னா. இந்தப்படம் திரைக்கு வர தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தமன்னா  பேட்டியளித்துள்ளார்.

நான் ஹிந்தி நடிகை என்றாலும் தென்னிந்திய சினிமா தான் என்னை பிரபலப்படுத்தியது. 

இந்த சமயத்தில் ஹிந்தியில் நான் நடித்த படங்களும் வெற்றி பெறாததால் தென்னிந்திய சினிமாவைப்போன்று ஹிந்தியில் என்னால் பிரபலமாக முடியவில்லை. 

இருப்பினும், ஹிந்தியில் நடித்து புகழ் பெற வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருப்பதால் நல்ல கதைகளை தேடி வருகிறேன். 

சில இயக்குநர்கள் சொன்ன கதைகள் பிடிக்காததால் நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன் என்றார்.


 #Tamannaah,#Himmatwala, #Humshakals, #Kolaiyuthir_Kaalam