AD

ஹீரோவிற்கு மேல் நயன்தாரா


கோலிவுட்டில் கலக்கிவரும் முன்னணி நடிகையாக கலக்கிவருபவர் லேடி சூப்பர்ஸ்ரார் நயன்தாரா. அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தயாராக உள்ளனர். தற்போது கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையும் நயன்தாரா தான் உள்ளார்.

ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார் நயன்தாரா. கதாபாத்திரம் மட்டும் அல்ல சம்பளமும் ஹீரோக்களுக்கு கொடுப்பதை விட அதிக சம்பளம் வாங்க வேண்டும் என்பதே அவரின் ஆசையாம்.

நயன்தாரா தற்போது படம் ஒன்றுக்கு ரூ. 5 கோடி வாங்குவதாக கூறப்படுகின்றது.ஆனால் இதுவே படம் ஒன்றுக்கு ரூ. 50 கோடி சம்பளம் வாங்க வேண்டும் என்பதே அவரின் நீண்ட கால ஆசையாம்.

10 ஆண்டுகள் கழித்து நயன்தாரா தற்போது தளபதி 63 படத்தில் விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.  இந்த படத்திற்காக அவர் மொத்தமாக கால்ஷீட் கொடுத்துள்ளார்.

தளபதி 63 ஷூட்டிங்ஸ்பாட்டில் விஜய்யின் வீடியோக்கள் வெளியான நிலையில் தற்போது தளபதி 63 ஷூட்டிங்ஸ்பாட்டில் நயன்தாரா தனது காரில் ஏறிச் சென்றபோது எடுத்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

#Ladysuperstar #Thalapathy63 #Nayanthara #Nayan #Tamilcinemaking