AD

வந்தியத்தேவனாகும் கார்த்தி

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.

இதில் விக்ரம், ஜெயம்ரவி, விஜயசேதுபதி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் எனப் பலர் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.

மணிரத்னத்தின் கனவு படமான இந்தப் படத்தில், கார்த்தி நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இப் படத்தில் பொன்னியின் செல்வனான ராஜராஜ சோழன் வேடத்தில் நடிக்கப்போவது விக்ரம் என்று கூறப்பட்டு வந்தது.

தற்போது வந்தியத் தேவன் வேடத்தில் கார்த்தி நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களுக்குமே சரித்திர காலத்து சண்டை பயிற்சி மட்டுமின்றி நடை உடை பாவனைகள் என அனைத்தையும் முன்னதாகவே முறையாக பயிற்சி கொடுக்கப் போகிறாராம் மணிரத்னம்.


#Ponniyin_Selvan, #Karthi, #Mani_Ratnam, #Vikram, #Aishwarya_Rai, #Amitabh_Bachchan, #Jayam_Ravi, #Vijay_Sethupathi,