AD

முன்னாள் காதலியுடன் மீண்டும் இணைந்துள்ள சிம்பு


சிம்பு வாழ்க்கையில் எத்தனை காதல் இருந்தது என்று எல்லோருக்கும் தெரியும். கடைசியாக அவர் நடிகை ஹன்சிகாவை காதலித்தார் பின் சில பிரச்சனைகளால் இருவரும் பிரிந்தனர்.

அந்த தகவலை அவர்கள் இருவருமே வெளிப்படையாக கூறியிருந்தனர்.

ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் ‘மஹா’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. ‘மஹா’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடனமாடவிருப்பதாகவும், அதற்காக 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகை ஹன்சிகா இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது ட்வீட்டில், ’முன்கூட்டியே தகவல் கசிந்ததால்.. நானும் சிம்புவும் மஹா படத்தில் இணைகிறோம்’ என்பதை தெரிவித்துள்ளார்.

#Simbu #Hanshika #Maha #SimbuAndHanshika #Tamilcinemaking