AD

வீட்டுக்கு வாங்க கொலை செய்கிறேன் நடிகரை மிரட்டிய


பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார்  தி என்ட் இணையதள தொடரில் நடிக்கிறார். த்ரில்லர் தொடரான இது குறித்து அமேசான் பிரைம் வீடியோ அறிவிப்பு வெளியிட்டது.

இந்த படத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றபோது அக்சயகுமார் தனது உடையில் நெருப்பை பற்ற வைத்து அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை கொடுத்தார்.இதுகுறித்து அவர் தனது மனைவி டுவிங்கிள் கண்ணாவிடம் கூட கூறவில்லை என தெரிகிறது.

இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் பார்த்த டுவிங்கிள் கண்ணா, 'நீங்கள் திடீரென தீ வைத்து கொண்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. வீட்டுக்கு வாங்க, உங்களை கொலை செய்கிறேன் என்று செல்லமாக மிரட்டியுள்ளார். டுவிங்கிள் கண்ணாவின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.
சில நெட்டிசன்கள் வீட்டிற்கு போன பிறகு உயிருடன் இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்ய ஏதாவது ட்வீட் போடுங்கள் என்று   குமாரை கலாய்த்துள்ளனர்.
#akshaykumar  #TwinkleKhanna #Tamilcinemaking