AD

கமலிற்காக விக்ரம் செய்த வேலையை பாருங்க!

நடிகர் விக்ரமின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சாமீ ஸ்கொயர். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் தற்போது கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை ராஜேஷ் எம். செல்வா இயக்குகிறார், கமல் ஹாசன் தயாரிக்கும் இந்த படத்தில் அக்சரா ஹாசன், நடிகர் நசீர் மகன் அபி ஹாசன், லீனா என இவர்கள் மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் விக்ரம் ஜிப்ரான் இசையில் ஒரு பாடலை பாடியிருக்கிறாராம்.

இந்த பாடல் மிகவும் பாசிட்டிவாக இருக்கும் என்று ஜிப்ரான் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், காலை எழுந்ததும் இந்த பாடலை கேட்டால் புத்துணர்ச்சியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கடாரம் கொண்டானில் விக்ரம் இப்படி ஒரு பாடலை பாட கமல் தான் முக்கிய காரணமாம்.
#vikiram #Tamilcinemaking #KadaramKondan