AD

பிரபாஸை கன்னத்தில் அறைந்த பெண் - வைரல் வீடியோ


பாகுபலி படத்தில் நடித்த பிறகு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே சூப்பர்ஹீரோ போல மாறிவிட்டார் பிரபாஸ். அவர் எங்கு சென்றாலும் எளிதில் அடையாளம் கண்டுவிடுகின்றனர். தற்போது சாஹோ பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் அவர் சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகை ஒருவர் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்துள்ளார்.

பிரபாஸுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு அவரது கன்னத்தில் மெதுவாக செல்லமாக அறைந்துவிட்டு சென்றார்.

ரசிகை  ஆர்வக்கோளாறில் இப்படி அறைவார் என்பதை பிரபாஸ் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் கன்னத்தை தடவிவிட்டு சிரித்து சமாளித்தார். அவர் கோபப்படாமல் இருந்தது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பிரபாஸ் ஏதோ நல்ல மனுஷனாக இருக்கப் போய் சும்மாவிட்டுவிட்டார். அந்த ரசிகை அறைந்த வீடியோவை பார்த்த ரசிகைகள் சிலர் நாங்களாக இருந்தால் பிரபாஸின் கன்னத்தில் முத்தம் கொடுத்திருப்போம் என்கிறார்கள்.


#Prabhas #Prabhasslapped #Tamilcinemaking