AD

அமைதி தூதர் பதவியிலிருந்து விலக நடிகைக்கு நெருக்கடி!!


நடிகை பிரியங்கா சோப்ரா யுனிசெப் எனப்படும் சர்வதேச  குழந்தைகள் அவசர நிதி அமைப்பின் நல்லெண்ண தூததராக கடந்த 12 வருடமாக செயல்பட்டு வருகிறார் . போர் பாதிக்கப்பட்ட ஜிம்பாப்வே, ரோஹிங்யா போன்ற பகுதிகள் மற்றும் இந்தியாவில் உள்ள குடிசை பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியும், உதவிகள் செய்தும் வந்தார். போரால் ஏற்படும் பாதிப்புகள்பற்றியும் பக்கம் பக்கமாக கருத்து தெரிவித்தார் பிரியங்கா.

ஆனால் தற்போது அவரை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்கும்படி எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. அதற்கு காரணம் அவர் வெளியிட்ட ஒரு டுவிட் மெசேஜ்தான். புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் பலியானதையடுத்து தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பாராட்டு தெரிவித்து மெசேஜ் வெளியிட்டார் பிரியங்கா. இது அவரை சிக்கலில் மாட்டி விட்டிருக்கிறது.

யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக இருக்கும் நீங்கள் அமைதி ஏற்படுவதற்கு என்ன வழி என்பதைத்தான் யோசித்திருக்க வேண்டும் அதைவிட்டு ஒரு தரப்பை பாராட்டுவதன் மூலம் போர் பதற்றத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறீர்கள் என்று பலரும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன் யுனிசெப் தூதர் பதவியிலிருந்து பிரியங்கா சோப்ராவை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரியங்கா வெளியிட்ட ஒற்றை டுவிட் மெசேஜ் அவரது பதவிக்கு எதிராக அமைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

#Unicef #Priyanka Chopra #pulwama #attack Pulwama #pakistan #india