AD

சரித்திரப் படமாகும் சைரா நரசிம்மரெட்டி

பிரம்மாண்டமாக வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற 'பாகுபலி' படங்களுக்குப் பின்னர் சரித்திரப் படமாக உருவாகி வருகிறது. 'சைரா நரசிம்மரெட்டி' 

இதில் சிரஞ்சீவி சைரா கதாபாத்திரத்தில் நடிக்க ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன், தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, கன்னட நடிகர் சுதீப் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா, தமன்னா  இருவருமே  சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. 

நயன்தாரா, சிரஞ்சீவியின் மனைவியாக நடிக்கிறார். சமீபத்தில் கூட சிரஞ்சீவி, தமன்னா நடித்த பாடல் காட்சி ஒன்றைப் படமாக்கி உள்ளார்கள்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். ஆனால், ஸ்ருதிஹாசன், சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை. இது தொடர்பாக ஸ்ருதிஹாசன் தரப்பிலிருந்து இன்னும் சம்மதம் சொல்லவில்லையாம். 

தமிழ், தெலுங்கில் ஸ்ருதிஹாசன் நடித்து இரண்டு வருடங்களாகிவிட்டது. அதனால் அவர் எப்படியும் நடிக்க சம்மதிப்பார் என்ற எதிர்பார்ப்புடன் படக்குழுவினர் காத்திருக்கிறார்களாம். 


#Chiranjeevi, #Sye_Raa_Narasimha_Reddy, #Tamannaah, #Nayanthara, #Shruti Haasan
#Amitabh_Bachchan