AD

பிக் பாஸ் தொகுப்பாளராகும் விஜய்

வருடத்திற்கு ஒரு முறை 100 நாட்கள் ஒளிபரப்பாகும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

நான்கு மொழிகளிலும் முன்னணி ஹீரோக்கள் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதால்  நிகழ்ச்சிக்கான வரவேற்பும் அதிகமாகவே காணப்படுகிறது.

தெலுங்கில் கடந்த இரண்டு கட்டங்களை ஜுனியர் என்டிஆர், நானி ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தனர்.

மூன்றாவது சீசனை சீனியர் ஹீரோக்களான வெங்கடேஷ், நாகார்ஜுனா ஆகியோர் தொகுத்து வழங்கலாம் எனத் தகவல் வெளியானது.

இப்போது, விஜய் தேவரகொண்டாவிடம் டிவி நிர்வாகத்தினர் பேசி வருகிறார்களாம். இளம் நடிகர்களில் முன்னணியில் இருக்கும் விஜய், தொகுத்து வழங்கினால் நிகழ்ச்சி வரவேற்பு அதிகரிக்கும் என எண்ணுகிறார்களாம்.

ஆனால், இதற்கு விஜய் சம்மதிப்பாரா என்பதுதான் கேள்விக்குறி. ஒருவேளை அவர் தொகுத்து வழங்கச் சம்மதித்தால் பெரும் தொகையை அவருடைய சம்பளமாக வழங்க டிவி நிர்வாகம் தயாராக உள்ளதாம்.


#Vijay_Deverakonda, #Bigg_Boss