AD

ஸ்ரீயின் இதயம் திருடிய அஜித்

கடந்த சில மாதங்களாகவே  சோஷியல் மீடியாவிலோ அல்லது கேமராக்கள் முன்போ பேச ஆரம்பித்தால் அது யாரோ ஒரு பிரபலத்தை பற்றிய  குற்றம் சாட்டவே தெலுங்கு கவர்ச்சி நடிகை ஸ்ரீ ரெட்டி கேமராக்கள் முன் பேசுகிறார் என்று சில மாதங்களாகவே பேசப்பட்டது.

அவர் குற்றம் சாட்டிய ஆள்களின் பட்டியல்தான் நீளமே தவிர, அவர் பாராட்டிப் பேசியது ஒன்றிரண்டு பேரைத்தான். தற்போது நடிகர் அஜித் குறித்து தனது முகநூல் பக்கத்தில் நெகிழ்வாகக் குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

அஜித்தின் படத்தை பார்க்காமல் நான் தூங்க மாட்டேன். தமிழ்நாட்டில்   முன்னணி நடிகராக இருந்தாலும் சர்ச்சைகளில் இருந்து தூர விலகி நிற்கிறார் அஜித். அமைதியாகப் பேசும் குணம் உடைய ஒரு நல்ல குடும்பஸ்தன் அவர். 

ரசிகர்களை நேசிப்பவர். சிறந்த மனிதநேயம் கொண்டவர். நல்ல கணவர்.  நல்ல தந்தை. இப்படி குணாதிசயங்களை கொண்ட இவர் கோடிக்கணக்கான பெண்கள் இதயத்தைத் திருடியவர்.

என்னை உட்பட , உங்கள் பாதங்களில் என் தலையை வைத்து வணங்குகிறேன் தல” என உருகி உள்ளார் ஸ்ரீ ரெட்டி.


#Sri_Reddy, #Ajith_Kumar, #tamilcinemaking