AD

'பேய்மாமா'வாக திரும்பி வந்துள்ளவடிவேலு


வடிவேலு பேய்மாமா என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாத்துறைக்குள் வந்துள்ளார். 24ம் புலிகேசி பட பிரச்சனையால் வடிவேலுவின் கெரியர் முடிந்துவிட்டது என்று பேச்சு கிளம்பியது. இந்நிலையில் அவர் சக்தி சிதம்பரத்தின் பேய்மாமா படத்தின் மூலம் திரும்பி வந்துள்ளார், ஹாரர் காமெடி படமான பேய்மாமாவின் ஹீரோவே வடிவேலு தான்.

பேய்மாமா ஹாரர் படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிப்பதே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. வடிவேலு திரும்பி வந்தது அனைத்து ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. வாங்க சார் வடிவேலு என்று ரசிகர்கள் அவரை வரவேற்று ட்வீட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பேய் மாமா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரை பார்த்தாலே சிரிப்பு வருகின்றது.பேய்மாமா போஸ்டர் ரசிகர் செய்தது என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.