AD

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ஜஸ்வர்யா


சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் இயக்கத்தில் 'மிஸ்டர் லோக்கல்' படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.  இதில் நயன்தாரா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதனையடுத்து  இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.   இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கின்றார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இயக்குநர் மித்ரன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அவர், என்னுடைய அடுத்த படமான 'ஹீரோ' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. திறமைசாலிகளான ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் மற்றும் மித்ரன் ஆகியோருடன் இணைவதில் மகிழ்ச்சி. சில வருடங்களுக்கு முன் ஷார்ட் பிலிமில் ஒன்றாக பணிபுரிந்தோம்.
தற்போது திரைப்படத்துக்காக இணைந்துள்ளோம்'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஜஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.