AD

மீண்டும் இணையும் பிரபல நடிகர்கள்


மணிரத்னம் இயக்கிய 'ஆயுத எழுத்து' திரைப்படத்தில் சூர்யாவும் மாதவனும் முதல்முறையாக இணைந்து நடித்தனர். பின்னர் கமல்ஹாசன், மாதவன் நடித்த 'மன்மதன் அம்பு' படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மாதவன் நடிக்கும் படம் ஒன்றில் சூர்யா சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளார். மாதவன் நடித்து இயக்கி வரும் திரைப்படம் 'ராக்கெட்டரி'. விஞ்ஞானி நம்பி நாராயணன்  வாழ்க்கை வரலாறு திரைப்படமான இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்ற கேரக்டரில் நடிகர் சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. அதேபோல் இந்த படத்தின் இந்தி பதிப்பில் இந்த கேரக்டரில் ஷாருக்கான் நடிக்கவுள்ளார்.

சிர்ஷா ராய் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்ய படத்தொகுப்பில் இந்த படம் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.