நடிகர் ஆதியுடன் சேரும் ஹன்சிகா!!
மனோஜ் தாமோதரன் இயக்கும் புதிய படத்தின் பெயர் "பாட்னர்". இதில் நடிகர் ஆதி, நடிகை ஹன்சிகா, பல்லக் லால்வானி, யோகி பாபு உள்பட பலர் நடிக்கின்றனர். இதில் ஆதிக்கு ஜோடியாக பல்லக் லால்வானி நடிக்கிறார். நடிகை ஹன்சிகாவுக்கு முக்கிய வேடம் தரப்பட்டுள்ளது. படம் பற்றி மனோஜ் தாமோதரன் கூறும்போது, ‘இது காமெடி கதை படம். அதே சமயம், படத்தில் சயின்ஸ் ஃபிக்ஷன் சம்பந்தமான முக்கிய அம்சம் ஒன்று இடம்பெறும். அது ரசிகர்களை அதிகம் கவரும்படி இருக்கும்’ என்றார்.
#Manoj Damodaran #Pattern #Adi #Hansika #Pallak Lalvani #Yogi Babu
Post a Comment