ரசிகர்கள் தொல்லை ; விஜய் எடுத்த முடிவு
விஜய் நடித்து வரும் 63 ஆவது படத்தின் படப்பிடிப்பு, சென்னை பின்னி மில்லில் நடைபெற்று வந்தது.
தொடர்ந்து, காசிமேடு துறைமுகம் பகுதியில் சில தினங்களாக நடைபெற்றது.
இந்த நிலையில் வடசென்னையைச் சேர்ந்த விஜய் இரசிகர்கள் அப் பகுதிக்குப் படையெடுக்கத் தொடங்கினர்.
படப்பிடிப்பு நடைபெற்ற பகுதியில் சூழ்ந்து கொண்டு தள்ளுமுள்ளு செயல்களில் ஈடுபட்டதால் அவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தினர்.
இதனால் விஜய்யை காண ஆவலுடன் வந்த இரசிகர்கள் வெறுப்புடன் அங்கிருந்து வெளியேறினார்கள். இதனால் விஜய் கொஞ்சம் அப்செட்டாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதனால், படப்பிடிப்பை காசிமேட்டிலிருந்து வேறு பகுதிக்கு மாற்றிவிடலாம் என்று விஜய் சொன்னதை அடுத்து, படப்பிடிப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
#tamilcinemaking, #Vijay

Post a Comment