AD

முன்னணி நாயகிகளே மறுத்த சமந்தாவின் கேரெக்டர்


மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பவர் நடிகை சமந்தா. மற்றும் பகத் பாசில், மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஆனால் சமந்தா நடித்த  கேரக்டரில் நடிக்க ஏற்கனவே இரண்டு முன்னணி நடிகைகளை இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா அணுகியதாகவும் அவர்கள் இந்த கேரக்டரில் நடிக்க மறுக்கவே மூன்றாவதாக சமந்தாவுக்கு இந்த கேரக்டர்  கிடைத்ததாகவும் தெரியவந்துள்ளது.

சமந்தா இந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு அவருடைய கணவர் நாக சைதன்யாவே ஆச்சரியமடைந்தாராம்.

மேலும் தியாகராஜன் குமாரராஜா படம் என்றாலே அதிக டேக்குகளில்தான் ஒரு காட்சி ஓகே  ஆகும் என்ற நிலை இருக்குமாம். ஆனால் சமந்தா அதிகபட்சம் மூன்றே டேக்குகளில் தனது காட்சியை ஓகே செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

#Superdelux #Samantha #Vijaysethupathi #Tamilcinemaking