AD

ஹீரோயினாக ப்ரியா வாரியர்-படம் படு தோல்வி


ப்ரியா பிரகாஷ் வாரியரின் நடிப்பில் வெளிவந்த அடார் லவ் படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. கண்ணடித்து பிரபலமான ப்ரியா பிரகாஷ் 
வாரியரின் நடிப்பு பலருக்கும் பிடிக்கவில்லை. ப்ரியாவால் தான் படம் பிளாப்பானது என்று படக்குழு தற்பொழுது நம்புகின்றது.  தயாரிப்பாளர்கள் அழுத்தம் கொடுத்ததால் தான் கதையை மாற்றி ப்ரியாவை 
ஹீரோயினாக்கினேன் என்று இயக்குநர் உமர் லுலு தெரிவித்தார்.

ப்ரியா வாரியரை விட அப் படத்தில் நடித்த நூரின் ஷெரிஃப் நல்ல நடிகை.  ப்ரியாவை தேவையில்லாமல் ஹீரோயினாக்க  வைத்து தன் படத்தை கெடுத்துவிட்டார்கள் என்ற கருத்தில் அவரது பேட்டி அமைந்து இருந்தது. ரீஸரில் கண்ணடித்த வீடியோ பிரபலமானதால் ப்ரியா வாரியரின் கதாபாத்திரத்தை மாற்றி அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதனால் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்ட என்னை ஓரங்கட்டிவிட்டனர் என்று நூரின் ஷெரிஃப் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு எல்லோரும் ப்ரியாவாரியர் மீது தமது அதிருப்தியை தெரிவித்த நிலையில் ப்ரியாவாரியர் அதற்கு பதிலளிக்கும் விதமாக நான் உண்மையை பேச ஆரம்பித்தால் சிலருக்கு பிரச்சனை வரும். நான் ஏன் அவர்களை போன்று இருக்க வேண்டும் என அமைதியாக உள்ளேன். கர்மா பார்த்துக் கொள்ளும். அது விரைவில் நடக்கும் என்று இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

ஆனால் பின்னர் இவ்வாறு படக்குழுவை குற்றம் சாட்டி போட்டிருந்த பதிவினை இன்ஸ்டகிராமில் இருந்து நீக்கிவிட்டார்.
#Priyawarrier #Tamilcinemaking