AD

நயன்தாராவின் புதிய பாடல் !!

நடிகர் அஜித்-நயன்தாரா நடிப்பில்  இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு  வெளியான ‘விஸ்வாசம்’ வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள "ஐரா" திரைப்படம் வரும் மார்ச்.28ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் முதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஐரா திரைப்படத்தை குறும்பட இயக்குநர் சர்ஜுன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில், ‘ஜிந்தாகோ’ பாடல் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ரிலீசையொட்டி, அதற்கான புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜிந்தாகோ’ புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

#Nayanthara #ladysuperstar #Yogi Babu #Sarjun KM #Airaa #Jinthako #Video Promo