AD

ஆர்யாவுடன் இணையும் நடிகை!!!

நடிகர் ஜெயம் ரவி நடித்த "மிருதன்","டிக் டிக் டிக்" திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவிருக்கும் "டெடி"திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி உள்ளது.

ஆர்யா நடிக்கவிருக்கும் ‘டெடி’ திரைப்படம் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம்  குழந்தைகள், இளைஞர்களுக்கான படமாக உருவாகவுள்ளது. இப்படத்தின் பணிகள் மே மாதம் முதல் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி சாயீஷா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இவர்கள் இருவரும் ‘கஜினிகாந்த்’,‘கப்பான்’ திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச்.10ம் தேதி ஆர்யா-சாயீஷா திருமணம் ஹைதராபாத்தில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவிருப்பது ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.

 #Arya #Sayyeshaa Saigal #Teddy #wedding #newmovie #Sakthi Soundar Rajan