AD

புதுப் பொலிவுடன் தங்கமகன்

ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் தங்கமகன். இந்தப் படம்
ஏ.ஜெகன்நாதன் இயக்கத்தில் 1983 இல் வெளிவந்தது.

அவருடன் பூர்ணிமா பாக்யராஜ், சில்க்ஸ்மிதா, ஜெய்சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க சத்யா மூவிஸ் தயாரித்தது.

36 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கமகன் படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 5.1 சவுண்ட் சிஸ்டத்தில் வெளியிடுகிறது சத்யா மூவிஸ். 

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் டிரைலர், தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதை சத்யா மூவீஸ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. 



#poornima, #Rajinikanth, #Jaishankar, #Pakkiyaraj