”ஜெ”ஆகும் கங்கனா
ஏ.எல்.விஜய் இயக்கத்தில், தமிழில் தயாராகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு தலைவி என்று பெயரிடப்பட்டுள்ளது. தனது சொந்த கதையை படமாக இயக்கி, நடிக்கப்போவதாக அறிவித்து, அதற்கான பணிகளில் கங்கனா ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் அவர் ஜெயலலிதாவாக நடிக்க ஒப்புக் கொண்டது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கங்கனா கூறியிருப்பதாவது,
இயக்குனர் விஜய் என்னிடம் கதை சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது. காரணம், ஜெயலலிதாவின் கதையும், என் கதையும் ஒரே மாதிரியாக இருக்கிறது. அவரது கதை, என்னுடையதை விட பெரிய வெற்றிக்கதை. இந்தக் கதையைக் கேட்கும்போது, என் கதைக்கும் அதற்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதைப் பார்த்தேன்.
எனவே, எனது கதையைச் சொல்லும் படமா அல்லது அவரது கதையைச் சொல்லும் படமா? என்ற கேள்வி என்னுள் வந்தபோது, ஜெயலலிதா கதைதான் இப்போதைக்கு தேவை என்பதை உணர்ந்து, அவரது கதையைத் தேர்ந்தெடுத்தேன். என்றார்.
#Kangana_Ranaut, #Jayalalithaa, #ALVijay, #tamilcinemaking
Post a Comment