AD

அரசியலில் கமலுடன் இணையும் ஒரு பிரபலம்!!

நடிகை கோவை சரளா தமிழ் சினிமாவில் ஆச்சி மனோரமாவிற்கு பிறகு காமெடியில் கலக்கி கொண்டு    இருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் நடித்த "சதிலீலாவதி  "திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.

மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட நடிகை கோவை சரளா, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில்  தன்னை கட்சியில் இணைந்துக் கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்த நிலையில், தற்போது கட்சியில் இணைந்துள்ள கோவை சரளா கொங்கு மண்டல தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#Kamal Haasan #Kovai sarala #Makkal Needhi Maiam #Womens day