AD

வெற்றி நாயகனாக வலம்வரும் சிவா!!

பின்னணி  எதுவும் இல்லாமல் சினிமாவில் நுழைந்து, தன் திறமையால் வளர்ந்து வெற்றி பெற்று, வெற்றிகரமான நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். 

அவருடைய  சில படங்கள் அண்மைக் காலமாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அவரைத் தேடி புதிய பட வாய்ப்புக்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

தற்போது 'மிஸ்டர் லோக்கல்' படத்தில் நடித்து முடித்த சிவா, ரவிகுமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து கேஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மித்ரன் இயக்கும் 'ஹீரோ' படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்க உள்ள படத்திலும் நடிக்கவுள்ளார். அவற்றோடு,  விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார்.

அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க,  சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் ஆகியிருப்பது திரையுலகத்தில் உள்ள சிலருக்குப் பொறாமையை வரவழைத்துள்ளது. 


  #misar_local,  #sivakarthikeyan, #vignesh_shivan, #KSRavikumar, #hero, #tamilcinemaking