பாடகி சுசீலாவுக்கு பாராட்டு விழா!!
பி.சுசீலாவின் 65 ஆவது சினிமா ஆண்டை முன்னிட்டு அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக ”சுசீலா 65” என்ற பெயரில் பிரமாண்ட பாராட்டு விழா இடம்பெறவுள்ளது.
இந்த விழா வரும் மே 19 ஆம் திகதி இந்த விழா சென்னை அண்ணா பல்கலைகழக நூற்றாண்டு விழா கலையரங்கில் நடக்கவுள்ளது.
நிகழ்வில் இடம்பெறும் இசை நிகழ்ச்சியில் பிரபல முன்னணி பாடகிகள் பி.சுசீலாவின் பாடலை பாடவுள்ளார்கள். அவரும் சில பாடல்களை பாடவிருக்கிறாராம்.
வட இந்தியாவில் லதா மங்கேஷ்கர் போன்று தென்னிந்தியாவின் பாடும் வானம்பாடி பி.சுசீலா. 84 வயதான பி.சுசீலா, 65 ஆண்டுகளாக சினிமாவில் பாடி வருகிறார்.
25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார். 1953 ஆம் ஆண்டு பெற்றதாய் படத்தில் அறிமுகமான அவர், இப்போது வரை பாடிக் கொண்டிருக்கிறார். 5 முறை தேசிய விருதும், 10 முறைக்கு அதிகமாக மாநில விருதும், மத்திய அரசின் பத்மபூஷன் விருதும் பெற்றவர். என்பது குறிப்பிடத்தக்கது.
#PSusheela, #pettathai, #tamilcinemaking

Post a Comment